சட்ட மா அதிபர் பதவிக்கு சஞ்சய் ராஜரட்னத்தை நியமிக்க பரிந்துரை
இலங்கையின் சட்ட மா அதிபர் பதவிக்கு ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்னத்தை நியமிப்பதற்கு அரசாங்கம் பரிந்துரை செய்துள்ளதாக தெரியவருகிறது.
தற்போதைய சட்ட மா அதிபர் தப்புல லிவேரா எதிர்வரம் 24ஆம் திகதி தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றுக் கொள்ள உள்ளார்.
இதனால் ஏற்படும் பதவி வெற்றிடத்திற்கு சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சொலிசிட்டர் ஜெனரலான சஞ்சய் ராஜரட்னத்தை நியமிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அரசியல் அமைப்பு பேரவைக்கு ஜனாதிபதி சட்த்தரணி சஞ்சய் ராஜரட்னத்தின் பெயரை அரசாங்கம் பரிந்துரை செய்துள்ளது.
சட்ட மா அதிபர் போன்ற உயர் பதவிகள் குறித்த தீர்மானங்களுக்கு சபாநாயகர் தலைமையிலான அரசியல் அமைப்புச் சபையினால் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டியது அவசியமானது.
இதன்படி சஞ்சய் ராஜரட்னத்தின் பெயர் அரசியல் அமைப்பின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்திற்கு நெருக்கமான தரப்புக்களை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சஞ்சய் ராஜரட்னம் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஸ்ட அதிகாரிகளில் ஒருவர் என்பதுடன், லண்டன் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் முதுமாணிப் பட்டம் பெற்றுக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
