சனத் நிஷாந்தவின் விபத்துடன் தொடர்புடைய மூன்றாவது வாகனம் குறித்து விசாரணை

Sri Lanka Police Investigation Sanath Nishantha Accident Sanath Nishantha
By Sivaa Mayuri Jan 28, 2024 12:19 PM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in சமூகம்
Report

இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி ஆகியோரின் உயிரை காவு கொண்ட விபத்துடன் தொடர்புடைய மூன்றாவது வாகனம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் தொடர்புடைய இரண்டு வாகனங்களின் ஓட்டுநர்கள் மூன்றாவது வாகனம் ஒன்று விபத்தின்போது பயணித்ததாக கூறியதால், நெடுஞ்சாலை பொலிஸாரிடம் இது தொடர்பில் ஆராயுமாறு கோரப்பட்டுள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விபத்திற்குள்ளான ராஜாங்க அமைச்சரின் வாகனம் மற்றும் கனரக வாகனங்களின் சாரதிகளின் கூற்றுக்களின்படி, வேகமான ஓட்டம், கவனக்குறைவு, மோசமான தெரு விளக்குகள் மற்றும் மூன்றாவது வாகனம் வழிவிடாமை என்பன, இந்த விபத்துக்கான காரணிகளாக அமைந்துள்ளன.

சனத் நிஷாந்தவின் விபத்துடன் தொடர்புடைய மூன்றாவது வாகனம் குறித்து விசாரணை | Sanath Nishantha Accident Investigation

விபத்தின் போது ராஜாங்க அமைச்சரின ஜீப் அதிவேகமாக மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்துள்ளது. சில சமயங்களில் அந்த வேகத்துக்கும் மேலாகவும் சென்றுள்ளது.

ஒரு மணி நேர போராட்டம்

இந்தநிலையில் விபத்துக்குள்ளான ஜீப் வாகனத்தின் சாரதி, வாகன விளக்குகளை ஒளிரச் செய்து மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டதை தான் அவதானித்ததாக பிணையில் அனுமதிக்கப்பட்ட கனரக கொள்கலன் சாரதி தெரிவித்துள்ளார்.

தமக்கு பின்னால் இரண்டு வாகனங்களும் ஆபத்தான முறையில் இயக்கப்படுவதை உணர்ந்த அவர் தனது வாகனத்தை இரட்டைப் பாதை அதிவேக நெடுஞ்சாலையின் இடதுபுறமாக நகர்த்தியுள்ளார்.

சனத் நிஷாந்தவின் விபத்துடன் தொடர்புடைய மூன்றாவது வாகனம் குறித்து விசாரணை | Sanath Nishantha Accident Investigation

இதன்போது முதலில் பயணித்த வாகனம், கனரக கொள்கலனைக் கடந்து சென்றபோது, அமைச்சரின் ஜீப் கொள்கலனின் பின்பகுதியில் மோதியது.

இந்தநிலையில் விமான நிலையத்தில் இருந்து திரும்பிக்கொண்டிருந்த ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியுடன் பயணித்த பொலிஸ் அதிகாரி ஒருவரே, விபத்தைப் பார்த்து முதலில் வாகனத்தை நிறுத்தியுள்ளார் அத்துடன் அவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கும், அவசர சேவை வாகனங்களுக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

இதேவேளை அமைச்சர் சனத் நிசாந்தவையும் அவரது மெய்ப்பாதுகாவலரையும் விபத்து இடிவுகளுக்குள் இருந்து வெளியேற்றுவதற்கு சுமார் ஒரு மணித்தியாலத்துக்கும் மேல் ஆனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 



மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US