இலங்கை கிரிக்கெட்டின் ஆலோசகராக சனத் ஜெயசூர்ய
இலங்கை கிரிக்கெட்டின் (SLC) ஆலோசகராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது நியமனம் உடனடியாக நடைமுறைக்கு வரும் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
கடுமையான பின்னடைவு
அண்மையில் இடம்பெற்ற போட்டிகளில் இலங்கை தேசிய அணி மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணிகள் தோல்விகளை சந்தித்ததன் விளைவாக கிரிக்கெட் சபையின் அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர்கள் சமீபத்தில் கடுமையான பின்னடைவை எதிர்கொண்டனர்.
ஆசியக் கோப்பையிலும், 2023 உலகக் கோப்பையிலும் தேசிய அணி தோல்விகளைச் சந்தித்ததன் விளைவாக இலங்கை அணி சாம்பியன்ஸ் டிராபிக்குத் தகுதி பெறும் வாய்ப்பையும் இழந்தது.
இந்நிலையில் சனத் ஜயசூரியவின் நியமனம், இலங்கை கிரிக்கெட் அணியை சரியான பாதையில் வழிநடத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri
