தாயுடன் சென்ற மகளை கடத்திய பரபரப்பை ஏற்படுத்திய காதலன்
மத்துகம பிரதேசத்தில் வகுப்பில் இருந்து தாயாருடன் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த 17 வயது மாணவியை, காதலன் எனக்கூறிய இளைஞன் கடத்திச் சென்றுள்ளார்.
இது குறித்து மத்துகம பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த மாணவி ஹொரண பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருகின்றார்.
முச்சக்கர வண்டியில் கடத்தல்
இந்த நிலையில் தனது 44 வயதுடைய தாயுடன் மத்துகம பிரதேசத்தில் உள்ள தனியார் வகுப்பில் இருந்து வந்து கொண்டிருந்த போது சந்தேக நபர் மற்றுமொரு நபருடன் முச்சக்கரவண்டியில் வந்துள்ளதாக தாயார் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் மகளின் கையை இழுத்து முச்சக்கரவண்டியில் ஏற்றிச் கடத்தி சென்றதாக தாயார் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பிள்ளையின் தாயும் முச்சக்கரவண்டியில் ஏற முற்பட்டதாகவும், சந்தேகநபர் அவரை தாக்கி உதைத்துவிட்டு ஓடிவிட்டதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுவதி கடத்தல்
சந்தேக நபர் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அத்துடன், சந்தேகநபர் மற்றும் கடத்தப்பட்ட யுவதியை கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்துகம தலைமையக குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இந்த புகைப்படத்தில் விஜய்யுடன் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இதோ பாருங்க Cineulagam

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
