அவசர அவசரமாக வெளிநாடு செல்லும் இளைஞர்கள் நூறு மாடிக்கு மேல் தொங்கும் நிலை! வெளியான தகவல்
கிழக்கின் பல தமிழர் பகுதிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் தொழில் செய்ய முடியாத நிலையில் வெளிநாடுகளில் போய் வேலை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றின் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று இளைஞர்கள் 20 - 22 வயதுகளில் வேறு எந்த வழியும் இன்றி கட்டார், மத்திய கிழக்கு நாடுகளில் சென்று வேலை செய்கிறார்கள்.
இங்கிருந்து போகும் போது தொழிற்சாலையொன்றில் வேலை இருப்பதாக தெரிவித்தே அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
ஆனால் அங்கே நூறு மாடிக்கு மேல் இருந்து கற்கள் தூக்கும் வேலை அல்லது நூறு மாடிக்கு மேலே தொங்கிக் கொண்டு பெயின்ட் அடிக்கும் வேலை செய்ய வேண்டியுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலை காரணமாக அவசர அவசரமாக கிடைக்கும் முதலாவது வாய்ப்பினை எடுத்துக் கொண்டு இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
