சனத் நிஷாந்தவின் வீடு எரிக்கப்பட்ட சம்பவம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
முன்னாள் அமைச்சர் சனத் நிஷாந்தவின் (Sanath Nishantha) வீடு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஹலவத்தை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட 68 சந்தேகநபர்களையும் விடுதலை செய்ய ஹலவத்தை நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
சனத் நிஷாந்தவின் வீடு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இவ்வாறு தீர்மானித்துள்ளதாக சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சுவினி பெரேரா தெரிவித்துள்ளார்.

வழக்கின் சாட்சிகள் உயிரிழப்பு
இந்த வழக்கின் சாட்சிகள் இருவர் உயிரிழந்தமை மற்றும் பொலிஸார் சாட்சியங்களை நீதிமன்றில் முன்வைக்க தவறியதன் காரணமாக சந்தேகநபர்களை விடுதலை செய்ய நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த மாதம் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பிரத்தியேக பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri
உக்ரேனிய, ஐரோப்பிய பங்களிப்பு இல்லாமல் போர் ஒப்பந்தம் செல்லாது: ஐரோப்பிய ஒன்றியம் போர்க்கொடி News Lankasri