சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள வேலைத்திட்டங்கள், அபிவிருத்திகள் தொடர்பில் கலந்துரையாடல்
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள், அபிவிருத்திகள் உள்ளிட்டவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடனான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு இணை தலைவருமான டக்களஸ் தேவானந்தா (Douglas Devananda) தலைமையில் குறித்த கலந்துரையாடல் இன்று காலை 10 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலானது கிளிநொச்சி மாவட்ட தொழிற்பயிற்சி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் அமைச்சர், சமுர்த்தி உதவி ஆணையாளர், உதவி பிரதேச செயலாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







