வீதிக்கு இறங்கிய சம்பூர் மகா வித்தியாலய மாணவர்களின் பெற்றோர்கள்
சம்பூர் மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கோரி பெற்றோர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் (26.05.2025) காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ் இந்திய துணைத்தூதரக உத்தியோகத்தர் ஓமந்தை விபத்தில் பலி - மனைவி உட்பட மூவர் அவசர சிகிச்சைப் பிரிவில்
சம்பூர் மகா வித்தியாலயத்தில் 526 பாடசாலை மாணவர்கள் உள்ளனர். அத்தோடு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நால்வரும், ஆசிரியர்கள் 20 பேரும் தற்போது கடமையாற்றுகின்றனர்.
ஆசிரியர் பற்றாக்குறை
இந்த நிலையில் கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம் உள்ளிட்ட 6 முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை காணப்படும் நிலையில் இதனை நிவர்த்தி செய்துதருமாறு கோரியே இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் ஆர்ப்பாட்ட இடத்திற்கு மூதூர் வலய கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் தேவதாஷ் ஜெயந்தன் வருகை தந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களோடு கலந்துரையாடியுள்ளார்.
அதன்போது ஆசிரியர் பற்றாக்குறைக்கு முடியுமான ஏற்பாடுகளை செய்து தருவதாக தெரிவித்ததை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.








ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 3 நாட்கள் முன்

கூந்தல் கரு கருன்னு காடு மாதிரி வளரணுமா? மருதாணியில் இந்த ஒரு பொருட்களை கலந்து தடவினால் போதும்! Manithan

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

ஏ. ஆர் ரஹ்மான் பானியில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரவிமோகன்- வழக்கறிஞர் வெளியிட்ட அறிக்கை Manithan
