அரசியல் வாரிசை கனடாவில் இருந்து இறக்கிய சம்பந்தன் (Video)
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பதவி விலக வேண்டும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்த கருத்தானது வடக்கு - கிழக்கு அரசியலில் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
தமிழர்களுக்கு ஆதரவாகவும் அவர்களில் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் குரல்கொடுத்த தலைவர் ஒருவரை இவ்வாறு பதவி விலக கூறுவது அநாகரீகமான செயல் என தமிழரசு கட்சியின் ஆயுட்கால உறுப்பினரான திருமலை நவம் சுட்டிக்காட்டினார்.
இரா. சம்பந்தன் தொடர்பில் சுமந்திரன் வெளிப்படுத்திய கருத்து தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
மேலும், “ இலங்கை தமிழரசு கட்சியுடன் தொடர்பில்லாத ஒருவரை அக்கட்சியின் உறுப்பினர் பதவிக்கு கொண்டுவந்து அங்கீகாரம் வழங்கியவர் இரா சம்பந்தன்.
2018 ஆம் ஆண்டு கனடாவில் இருந்து வந்த குகதாசனை தனக்கு கீழ், அல்லது தனக்கு அடுத்த தலைமுறையாக கொண்டுவர சம்பந்தன் முயற்சித்தமை உண்மையாகும்.
அதேபோல் இந்து கல்லூரியின் முன்னாள் அதிபர். சி. தண்டாயுதபாணியை அவர் அடுத்த கட்ட நகர்வுக்கு கொண்டுவந்தார்.
திருகோணமலை மாவட்டத்தை அடுத்தகட்ட செயற்பாடுகளுக்கு கொண்டு செல்லவே அவர் இவ்வாறு செயற்பட்டார்.
திருகோணமலை மாவட்டத்தின் அடிப்படை பிரச்சினைகள் அனைத்திலும் முன்னின்று செயற்பட்டவர் அவர்.
அவ்வாறான ஒரு அரசியல் தலைவரை, பதவி விலக வேண்டும், ஓய்வு பெற வேண்டும் என தெரிவிப்பது அநாகரீகக்கமான செயல்” என குற்றம் சுமத்தினார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,