ஐ.நா. ஆணையாளரின் அறிக்கையை வரவேற்கின்றது கூட்டமைப்பு! - விரைவில் பதில் அறிக்கை என்கிறார் சம்பந்தன்
"இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் வெளியிட்டுள்ள அறிக்கையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 49ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகின்றது.
இந்நிலையில் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டின் இலங்கை பற்றிய, 'இலங்கையில் மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தினை ஊக்குவித்தல்' எனும் தலைப்பிலான அறிக்கையின் முதற்பிரதி வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்த கருத்த வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறியதாவது,
"போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறல், புதிய அரசமைப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விபரீதம் உள்ளிட்ட தமிழர் நலன்சார் பல விடயங்களைச் சுட்டிக்காட்டி இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் வெளியிட்டுள்ள அறிக்கையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது.
இது தொடர்பான தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் நிலைப்பாட்டை நாம் அறிக்கையூடாக வெளியிடவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 2 மணி நேரம் முன்
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
லொட்டரியில் கொட்டிய $803 மில்லியன் அதிர்ஷ்ட மழை: புளோரிடாவை சேர்ந்த நபருக்கு கிடைத்த ஜாக்பாட் News Lankasri
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam