நீதிமன்றத்தினதும் நீதிபதிகளினதும் சுதந்திரம் தொடர்பில் வெளிநாட்டு விசாரணை வேண்டும்: சம்பந்தன் காட்டம்
நீதிமன்றத்தினதும் நீதிபதிகளினதும் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தினால் அது பாரதூரமான குற்றமாகும், இந்த விடயம் சம்பந்தமாக உள்நாட்டு விசாரணை மாத்திரமல்ல வெளிநாட்டு விசாரணையும் நடக்க வேண்டியது அவசியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அழுத்தங்கள் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா பதவி விலகியமை தொடர்பிலும், உயிர் அச்சுறுத்தல் காரணமாக அவர் நாட்டை விட்டு வெளியேறியமை குறித்தும் இந்த நாடும் அரசும் வெட்கித் தலைகுனிய வேண்டும் எனவும் இரா.சம்பந்தன் அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ளார்.
நீதிபதி ரி.சரவணராஜா மீளவும் பதவியை ஏற்பதற்கும், அவர் சுதந்திரமாகக் கடமையாற்றுவதற்கும் ஏதுவான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் விரைந்து எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முல்லைத்தீவு நீதிபதி
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"குருந்தூர்மலை சம்பந்தமான முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தல், அந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்தல் மற்றும் அழுத்தங்களைப் பிரயோகித்தல் ஆகிய விடயங்கள் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவையாகும்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தன் மீது பயன்படுத்தப்பட்ட அழுத்தங்கள் காரணமாகப் பதவியில் இருந்தும் விலகியுள்ளார். அதேவேளை, உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டும் அவர் வெளியேறியுள்ளார்.
இதனூடாக அவர் சந்தித்த நெருக்கடிகள் எவ்வாறு இருந்தன என்பதை விளங்கக்கூடியதாக இருக்கின்றது.
இந்த விவகாரம் தொடர்பில் நாடும் அரசும் வெட்கித் தலைகுனிய வேண்டும். நீதிமன்றமும் நீதிபதிகளும் சுதந்திரமாகச் செயற்பட இடமளிக்கும் போது தான் மக்கள் நீதிமன்றம் சென்று நீதியைப் பெற முடியும்.
இலங்கையின் நீதித்துறை சுதந்திரத்தைப் பறிக்கும் இந்தப் பாரதூரமான செயல்களை வெளிநாடுகளும், சர்வதேச அமைப்புக்களும் மிகவும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.
அத்துடன் நீதிபதி ரி.சரவணராஜா மீளவும் பதவியை ஏற்பதற்கும், அவர் சுதந்திரமாகக் கடமையாற்றுவதற்கும் ஏதுவான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் விரைந்து எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
