பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 50ற்கும் மேற்பட்டோர் பலி
பாகிஸ்தானின், பலூசிஸ்தான் மாகாணத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 52 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மசூதிக்கு அருகில் இன்றைய தினம்(29.09.2023) இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மசூதி அருகே நடந்த இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் கூறப்படுகிறது.
தற்கொலைப் படை தாக்குதல்
பலூசிஸ்தானில் மஸ்துங் மாவட்டத்தில் உள்ள மதினா மசூதியின் அருகே இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் மஸ்துங் மாவட்ட பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மிலாத் நபியின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்புத் தொழுகைக்காக ஏராளமானோர் திரண்டிருந்த நிலையில், இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
Horrific: Deadly Bomb Blast at Balochistan, Pakistan, Claims Over 60 Lives
— Adam Albilya - אדם אלביליה (@AdamAlbilya) September 29, 2023
A suicide bomber attacked a crowd celebrating the Prophet Muhammad's birthday in Mastung, Balochistan, resulting in over 60 fatalities and more than 100 injuries.
WATCH: Chronological compilation of the… pic.twitter.com/PeRQqHkdPV
இந்தச் சம்பவம் குறித்து அந்நாட்டு பாதகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், " தற்கொலைப் படை தாக்குதல் ஒன்றே இடம்பெற்றுள்ளது.
இதில் தற்கொலைதாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவத்தில் காயமடைந்த பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என தெரிவித்துள்ளார்.