நீங்கள் என்னை பயன்படுத்திவிட்டீர்கள்! பிள்ளையானும் பதிலளிக்கவில்லை: கருணா அதிருப்தி என தகவல்
நீங்கள் என்னை பயன்படுத்திவிட்டு எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மீது கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றம் சுமத்தியுள்ளார் என உறுதிப்படுத்த படாத டுவிட்டர் தளத்தில் இருந்து பதிவொன்று இடப்பட்டுள்ளது.
மிலாத் நபி திருநாளிற்கு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச டுவிட்டர் பதிவொன்றினை பதிவிட்டிருந்தார்.
எந்த உதவியும் செய்யவில்லை
அதில் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் போதனைகள், அன்பானவர்களாகவும், அதிக இரக்கமுள்ளவர்களாகவும், பகிரப்பட்ட மனித நேயத்தில் ஒன்றுபடவும் நம்மை ஊக்குவிக்கட்டும் என பதிவிட்டிருந்தார்.
Wishing everyone a blessed Milad-Un-Nabi! May the teachings of the Holy Prophet (PBUH) inspire us to be kinder, more compassionate, and united in our shared humanity. #EidMubarak
— Namal Rajapaksa (@RajapaksaNamal) September 28, 2023
இந்த பதிவிற்கு விநாயகமூர்த்தி முரளிதரன் டுவிட்டரில் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் பதிவிட்டுள்ளதாவது,"நான் இன்று மகிழ்ச்சியாக இல்லை.நீங்கள் என்னை பயன்படுத்திவிட்டு எனக்கு எந்த உதவியும் நீங்கள் செய்யவில்லை. நான் தினமும் குடிக்கிறேன். உங்களுக்கு இப்போது மகிழ்ச்சி தானே.

பிள்ளையானும் எனது தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பது இல்லை. நான் மிகவும் சோகமாக உள்ளேன்." என பதிவிட்டுள்ளார். ஆனால் இந்த பதிவு விநாயகமூர்த்தி முரளிதரனின் உத்தியோகபூர்வ பதிவா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan