சம்மாந்துறை தவிசாளரை தொடர்ந்து 7 உறுப்பினர்கள் அதிரடி பதவிவிலகல்(Photos)
சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் தனது பதவிவிலகல் கடிதத்தை உத்தியோகபூர்வமாக தேர்தல் ஆணையாளருக்கு நேற்று முன்தினம்(09.01.2023) அனுப்பி வைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.சி.எம்.சஹீல், எம்.எஸ்.சரீபா, எம்.ரீ.பெளசுள்ளாஹ், கே.எம்.இன்பவதி, என்.கோவிந்தசாமி, கே.குலமணி, ஆர்.வளர்மதி ஆகியோர் தங்களின் பதவிவிலகல் கடிதத்தை சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட்டிடம் கையளித்துள்ளனர்.
உள்ளுராட்சி சபைகள்
இவர்களின் பதவிவிலகல் கடிதங்கள் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 20 திகதிற்கு முன்னர் உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம் தென்படுகின்றது. அவ்வாறு கலைக்கப்படாவிட்டாலும் கூட எதிர்வரும் மார்ச் 19ம் திகதி உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் முடிவுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
