சர்வதேச கன்னி தொடரில் களமிறங்கவுள்ள சமிந்து விக்ரமசிங்க
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணிக்கெதிரான சர்வதேச டி20 தொடரில் சமிந்து விக்ரமசிங்கவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடர் எதிர்வரும் 27திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த தொடருக்கு இலங்கை சார்பில் சரித் அசலன்க தலைவராக சரித் அசலன்க செயற்படவுள்ளார்.
சரித் அசலன்க
அத்துடன் தினேஷ் சந்திமால், குசல் ஜனித் பெரேரா, பினுர பெர்னாண்டோ ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் சமிந்து விக்ரமசிங்க சகலதுறைகளிலும் பிரகாசிக்கும் வீரராவர்.
இலங்கை குழாம் சார்பில் சரித் அசலன்க, பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, தினேஷ் சந்திமால், தசுன் ஷானக்க, வனிந்து ஹசரங்க, சமிந்து விக்ரமசிங்க, மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே, துஷ்மன்த சமீர, மதீஷ பத்திரண, அவிஷ்க பெர்னாண்டோ, பினுர பெர்னாண்டோ, நுவன் துஷார ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
