சட்டத்தரணியாக பெரும் வருமானம் ஈட்டிய சம்பந்தன்: சீ. வீ. கே. சிவஞானம் புகழாரம்
மறைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர் இரா. சம்பந்தனை (R. Sampanthan) தந்தை செல்வா அரசியலுக்கு கூட்டி வந்த போது, அவர் திருமலையில் பெரும் வருமானம் ஈட்டும் சட்டத்தரணியாக திகழ்ந்தவர் என வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ. வீ. கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
சம்பந்தனின் மறைவையொட்டி அவர் நேற்று (05.07.2024) விடுத்த இரங்கல் செய்தியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் அந்த அறிக்கையில்,
சம்பந்தனின் இன விடுதலை வேட்கையையும் விடுதலை போராட்ட உணர்வையும் இனங்கண்ட தந்தை செல்வநாயகம், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியில் அவரை இணைத்துக் கொண்டார்.
நாடாளுமன்ற பிரதிநிதி
இதனை ஒருமுறை தந்தை செல்வா நினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோது, மனநெகிழ்ச்சியோடு என்னுடன் பகிர்ந்து கொண்டமையையும் அவர் தந்தை செல்வாவின் மீது வைத்திருந்த அதீத பற்றையும் நான் பார்த்திருக்கின்றேன்.

இவ்வாறு தந்தை செல்வாவால் தேடி அரசியலுக்கு கொண்டு வரப்பட்டபோது சம்பந்தன், திருமலையில் பெரும் வருமானம் ஈட்டும் சட்டத்தரணியாக சட்டத்துறையில் திகழ்ந்தவர்.
அவ்வாறான வருமானத்தை முழுமையாக கைவிட்டே 1977ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, 2001ஆம் ஆண்டிலிருந்து இறுதி வரை திருமலையின் நாடாளுமன்ற பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார். அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் செயற்பட்டு எல்லோரையும் அரவணைத்துச் சென்றவர் - என்றுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam
முறைத்துக்கொண்டு நின்ற பிரஜன், Chair தூக்கிப்போட்டு விஜய் சேதுபதி அதிரடி- பிக்பாஸ் 9 புரொமோ Cineulagam