சிறையில் சாமரவின் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்த அதிகாரிகள்!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, படுப்பதற்கு மெத்தை வழங்குமாறு விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
சாமர சம்பத் தசநாயக்க முதுகு வலி இருப்பதனால் தனக்கு மெத்தை வழங்குமாறு கோரியுள்ளதுடன் வைத்தியர்களால் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக வெலிக்கடை சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையாளருமான காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கோரிக்கை
சாமர சம்பத் தசநாயக்க இவ்வாறு கோரிக்கை விடுத்ததையடுத்து அவரை வைத்தியர்களிடம் பரிந்துரைக்கப்பட்ட பின்னர் இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக காமினி பி. திசாநாயக்க கூறியுள்ளார்.
மேலும், அவருக்கு மெத்தை தேவைப்பட்டால் அவரது முதுகுவலிக்கு அவர் பெற்ற சிகிச்சை குறித்த அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறும் அதை சிறப்பு வைத்தியர்களிடம் பரிசீலனைக்கு அனுப்பப்பட்ட பின்னர் இது தொடர்பாக கவனம் செலுத்தலாம் என வைத்தியர்கள் கூறியுள்ளதாகவும் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
