அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி அநுரவின் கடும் எச்சரிக்கை
அநுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) அரச ஊழியர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அதாவது, சம்பளம் உயர்த்தப்பட்டிருந்தாலும் சில இடங்களில் அரசு அதிகாரிகள் சிறு தவறுகளை செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
உடனடியாக அவற்றை விட்டுவிட்டு கடமைகளைச் செய்ய வேண்டும், இல்லாவிட்டால் மிகவும் சிரமப்பட்டு பெற்ற வேலை சில நாட்களில் பறிபோகும் என எச்சரித்துள்ளார்.
மக்களின் பணம்
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
76 வருடங்களுக்குப் பிறகு ஒரு அரசாங்கம் அமைத்துள்ளோம். அது எப்படிப்பட்ட அரசாங்கம்? மக்களின் பணத்தை ஒரு ரூபாய் கூட திருடாத, வீணாக்காத அரசாங்கம்.
எங்கள் அமைச்சர்கள், நான், எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் ஒரு ரூபாய் கூட திருட மாட்டார்கள், வீணாக்க மாட்டார்கள் என்று நான் உறுதியளிக்கிறேன்.
முதல் முறையாக இப்படி ஒரு அரசாங்கம் அமைந்துள்ளது. முன்பு வேலை ஒன்றை பெறக் கூட இலஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது. வீதி போடும்போது அமைச்சரின் வீட்டுக்கு பணம் சென்றதெல்லாம் முடிந்துவிட்டது.
பணிநீக்கம்
இன்னும் சில இடங்களில் சில அரசு அதிகாரிகள் சிறு சிறு தவறுகளை செய்வதாக தகவல் வருகிறது. நாங்கள் சம்பளம் உயர்த்தியுள்ளோம். இப்போது எனக்குத் தெரியும் சுங்கத் துறையில் நான்கு பேர் நேற்று முன்தினம் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இன்னும் இரண்டு மூன்று பேர் வெளியேறுவார்கள். பொலிஸ் துறையில் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் உட்பட சிலர் பணிநீக்கம் செய்யப்பட்டு வெளியேறியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
