காசாவில் தீவிரமடைந்துள்ள ஹமாஸ் எதிர்ப்பு போராட்டம்! பொதுவெளியில் மரணதண்டனை
ஹமாஸுக்கு எதிராக காசாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தில் கலந்துக்கொண்ட 6 பேருக்கு பொதுவெளியில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹமாஸ் அமைப்பானது காசாவில் இருந்து வெளிநடப்பு செய்ய வேண்டும் என கோரி கடந்த வாரம் போராட்டங்கள் வலுபெற ஆரம்பித்தன.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பலருக்கு பொதுவெளியில் கசையடி தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும், பலர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கொடூரமான தாக்குதல்
இது தொடர்பில் இங்கிலாந்து பத்திரிகை ஊடகம் ஒன்றுக்கு போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் வழங்கியுள்ள செய்தியில்,
"ஹமாஸ் மக்களை கொடூரமான முறையில் ஒடுக்குகின்றனர்.
மிலேச்சத்தனமான தாக்குதலை முன்னெடுத்துள்ளனர்.
ஹமாஸ் எதிர்ப்பு
ஹமாஸை எதிர்ப்பவர்களுக்கு இதுதான் தண்டனை என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.'' என்றார்.
இந்நிலையில், எதிர்ப்பில் ஈடுப்பட்ட 22 வயது பாலஸ்தீனியர் ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் அதிகாரப்பூர்வ X பக்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2019 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளிலும் ஹமாஸை எதிர்த்து காசாவில் கிளர்ச்சிகள் நடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
