அமெரிக்காவிற்குள் எல்லையைக் கடக்க முயன்ற 4 இலங்கையர்கள் நாடு கடத்தல்
அமெரிக்காவிற்குள் எல்லையைக் கடக்க முயன்ற 4 இலங்கையர்கள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதன் பின்னர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து, இலங்கை இப்போது அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எதிர்காலத்தில் டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்ற கொள்கையின் கீழ் எந்தவொரு இலங்கையரை நாடு கடத்த முயன்றால், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்படைப்பு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறை மற்றும் பிற சட்டங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள வழிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளனர்.
நாடு கடத்தல்
குறித்த 4 இலங்கையர்களும் அமெரிக்க எல்லையை கடக்க முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் கைது செய்யப்பட்டு பனாமாவிற்கு நாடு கடத்தப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கீழ் அமெரிக்கா அமெரிக்க குடியேற்ற முறையை மிகப்பெரிய மாற்றியமைக்க முடிவு செய்துள்ளது.
சட்டவிரோத குடியேறி
அமெரிக்காவில் சட்டவிரோதமாக இருக்கும் தங்கள் குடிமக்களை தீவிரமாகவும் விரைவாகவும் திரும்ப அழைத்துச் செல்வது ஒவ்வொரு நாட்டின் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோத குடியேறிகளில் சில இலங்கையர்களும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 43 நிமிடங்கள் முன்

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam
