இலங்கையில் புத்தாண்டில் நெருக்கடி : முறையிட முடியாமல் மக்கள் தவிப்பு
இலங்கையின் பல பகுதிகளில் கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தற்போதைய பற்றாக்குறை காரணமாக இந்த அரிசி வகைகளின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.
அதற்கமைய, சில பகுதிகளில், ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 310 முதல் 320 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.
வாடிக்கையாளர்கள்
ஒரு கிலோ சம்பா அரிசி 270 மற்றும் 290 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.
பல பகுதிகளில், கடை உரிமையாளருக்கு மிக நெருக்கமான வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்த விலையில் அரியை கொள்வனவு செய்ய முடியும். எனினும் அதற்கான ரசீதுகள் எதுவும் வழங்கப்படுவதில்லை.
அரிசி விற்பனை
ரசீது கோரப்படும்போது, "Others" என்று குறிப்பிட்டே ரசீது வழங்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.
இதன் காரணமாக, நுகர்வோர் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையில் முறைப்பாடு செய்ய முடியவில்லை என பலரும் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

முழுசா 10 ஆண்டுகளுக்கு பின் வரும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அதிஷ்டம் எந்த ராசிகளுக்கு? Manithan

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
