மோடியின் இலங்கை விஜயம்! ரணிலிடம் இருந்து அநுர அரசுக்கு சென்ற அவசர எச்சரிக்கை
அதானி விடயத்தை அரசியலாக்குவது இந்தியா மற்றும் இலங்கையின் இராஜதந்திர உறவுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார்.
அதானி திட்டத்தை பணம் தூண்டியதாக கூறப்படும் அரசாங்கத்தின் கருத்தை அவர் மறுத்துள்ளார்.
அத்துடன், பணம் எடுக்கப்பட்டதாக யாராவது கூறினால், பணத்தை யார் கொடுத்தார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சரியான காரணங்கள்
மேலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது இவ்வாறான விடயங்களை அரசியலாக்க வேண்டாம் என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கைகளுக்கு இணங்க இந்த திட்டங்களை நிறைவேற்றுவதிலும் இலங்கை - இந்திய உறவுகளை வலுப்படுத்துவதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, எரிசக்தி ஒத்துழைப்பில் அரசாங்கம் இந்தியாவுடன் தொடர்ந்து பணியாற்றும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்திய விக்ரமசிங்க, திட்டங்களை நிறுத்துவதற்கான எந்தவொரு முடிவும் சரியான காரணங்களால் நியாயப்படுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 6 நிமிடங்கள் முன்

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
