தமிழரசுக் கட்சி வேட்பாளர் மீது தாக்குதல்
மட்டக்களப்பு- வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் ஒருவரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவமானது, நேற்று (31) இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போரதீவுப்பற்று பிரதேசசபைக்காக போட்டியிடும் அருள்ராஜா பிரேமாகரன் என்பவரின் வீட்டின் மீதே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்த தாக்குதல் காரணமாக வீட்டிலிருந்த யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லையென வெல்லாவெளி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த நபர் நேற்று இரவு மரண வீடு ஒன்றுக்கு சென்றிருந்த நிலையில் வீட்டின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதாகவும் அந்தநேரத்தில் வீட்டில் மனைவி,பிள்ளைகள் உறங்கிக்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வீட்டின் கூரையின் மீது இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ள நிலையில் வீட்டின் உட்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சீற் எரிந்துள்ளதாகவும் வேறு சேதங்கள் ஏற்படவில்லையெனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
