நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்! சாமர சம்பத் நாடாளுமன்றில் ஆவேசம்
நாட்டில் ஏற்பட்ட கடும் வெள்ளத்திற்கு கமத்தொழில், கால்நடை வளங்கள் மற்றும் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் ஒதுக்கீட்டுச் சட்டம் -2026 குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.
நீர்ப்பாசனத்துறை அமைச்சரின் பொறுப்பு
தொடர்ந்துரையாற்றிய அவர்,''கடும் வெள்ளம் தொடர்பில் அரசாங்கம் அல்ல நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ஆராய்ந்து பார்த்திருக்க வேண்டும்.இதை கட்டுப்பத்திருக்கலாம்.எந்த அமைச்சர்களும் பொறுப்புகளில் இருந்து விலகி நிற்க முடியாது.
முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்க மாகாவலித் திட்டத்தை ஆரம்பித்து 46 வருடங்கள் கடந்து விட்டது.ரண்டம்பே,ரண்தெனிகல அணைக்கட்டிலுள்ள நீரை சரியான நேரத்தில் திறந்து விட்டிந்திருந்தால் மஹியங்கனை பாதிப்புள்ளாகியிருக்காது.
மஹியங்கனை பாதிப்பு
மஹிங்கனை வைத்தியசாலை ஆறு மாவட்டத்தினர் வைத்திய வசதிகளை பெற்றுக்கொள்ளுமிடம். மஹியங்கனை வைத்திசாலையில் ஒன்றும் எடுக்க முடியாது.அத்தோடு நீதிமன்றம்,பொலிஸ் நிலையம் மற்றும் மதஸ்தலங்கள் முழுமையாக அழிந்துள்ளன.
நீதிமன்றத்தின் அனைத்து ஆவணங்களும் அழிந்துள்ளன.46 வருடங்கள் நடக்காதது இன்று நடந்திருக்கிறது.மண்சரிவு தொடர்பில் எமக்கு ஒன்றும் கூற முடியாது.நீரை சரியாக நிர்வகித்திருந்தால் பாதிப்பை குறைத்திருக்கலாம்.''என தெரிவித்தார்
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பழனியாக நடிக்கும் ராஜ்குமாரின் மனைவி, குழந்தைகளை பார்த்துள்ளீர்களா?... இதோ Cineulagam
ஜனனி சொன்ன விஷயம், குணசேகரனுக்கு எதிராக விசாலாட்சி இதை செய்வாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam