தேசிய மக்கள் சக்தியென்ற புயலில் அனைத்தும் அள்ளுண்டு போய்விட்டது! சமந்த வித்யாரத்ன ஆவேசம்
தேசிய மக்கள் சக்தியென்ற புயல் ஏற்கனவே வந்துவிட்டது. அந்த புயலில் அனைத்தும் அள்ளுண்டு போய்விட்டது.எதிர்காலத்திலும் பல அடித்துச் செல்லக் கூடும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சரிடம் மகிந்த ராஜபக்ச புயலில் நாமலின் மணம் என்ற மொட்டுக் கட்சியின் வேலைத்திட்டம் தொடர்பில் கருத்து கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசியல்வாதிகளுக்கு எதிர்காலம் இல்லை
தொடர்ந்துரையாற்றிய அவர்,''அரசியலின் மணம் மற்றும் வாசனையை மக்கள் நன்கறிந்துள்ளனர். மகிந்த ராஜபக்ச புயலில் நாமலின் மணமும் மக்கள் அறிவர்.தற்போது ஐஸ் போதை பொருள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களின் மணங்களையும் மக்கள் நன்றாக அறிந்து வைத்துள்ளனர்.
மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு எதிர்காலம் இல்லை.வெவ்வேறு பெயர்களில் மீளெழுந்து வந்தாலும் மக்கள் முன்பை விட அனைத்தையம் அறிந்து வைத்திருக்கின்றனர். ஆதலால் மகிந்த ராஜபக்சவின் அரசியல் இன்று மக்கள் மத்தியில் செல்லுப்படியாகாது.
மகிந்த ராஜபக்ச ஆட்சியில் பலன் அடைந்தவர்கள் அவருக்கு உதவி செய்யலாம்.ஆனால் அவர்கள் தொடர்பில் விசாரணை நடக்கவும் கூடும்.அதையும் அவர்கள் சிந்திக்க வேண்டும். மகிந்த ராஜபக்சவுக்கு கொழும்பில் யாராவது நன்கொடையாக வீடொன்றை வழங்கலாம்.அது தொடர்பில் எமக்கு எவ்வித கவலையும் இல்லை.
மோசடியாக சம்பாதித்த சொத்துக்களுக்கான சட்டத்தையும் அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது.ஆதலால் நாம் பொறுமையாக பார்ப்போம்''என கூறியுள்ளார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 5 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
