80000 மெட்ரிக் டொன் கீரி சம்பா டட்லி சிறிசேனவிடம்..!
கீரி சம்பா 80,000 மெட்ரிக் டொன் கோடிஷ்வர அரிசி வர்த்தகர் டட்லி சிறிசேனவிடம் இருப்பதாக அநுராதபுர மாவட்ட ஒன்றிணைந்த விவசாய அமைப்பின் தலைவர் புஞ்சிரால ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சந்தையில் கீரி சம்பா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரிசியின் விலை கட்டுப்பாட்டில்
தொடர்ந்து பேசிய அவர், நான் சொல்வது உண்மையான கதையாகும். கீரி சம்பா 80,000 மெட்ரிக் டொன்னை குற்றி சந்தைக்கு விடுவதே அரசாங்கத்தின் வேலையாகும். அதற்கே அரசாங்கம் இருக்கிறது.
இதை அரசாங்கத்திற்கு செய்ய முடியாவிட்டால் நாம் யாருக்கு சொல்வது.

அத்தோடு பெரிய மற்றும் சிறிய, நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் இருக்கிறார்கள்.அவர்களிடமும் கீரி சம்பா இருக்கலாம்.நாங்கள் பாரிய ஆலை உரிமையாளர்களுடன் எவ்வித கோபமும் இல்லை. அவர்களும் சந்தையில் இருக்க வேண்டும். அவர்களுக்கே நாம் நெல்லை கொடுக்கிறோம்
ஆனால் டட்லி சிறிசேனவே நெல் மற்றும் அரிசியின் விலைகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். அரசு இதற்கு முன்வருதில்லை என்றால்.ட்டலி சிறிசேனவே அரசாங்கத்தை நடத்துவதாக எங்களுக்கு தெரிகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam