உயிரிழந்த கோசல எம்.பியின் பதவி வெற்றிடத்திற்கு சமந்த தெரிவு!
மறைந்த தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீரவின் பதவிக்கு பதிலாக சமந்த ரணசிங்க (samantha ranasinghe) பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கோசல நுவன் ஜயவீர கடந்த (6) ஆம் திகதி திடீர் மாரடைப்பு காரணமாக கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.
பதவி வெற்றிடம்
இந்தநிலையில், அவரது மறைவைத் தொடர்ந்து ஒரு அமைச்சர் பதவி வெற்றிடமாக உள்ளதாக நாடாளுமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இதனையடுத்து, கேகாலை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராக ரத்நாயக்க முதியான்செலாகே சமந்த ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
சமந்த ரணசிங்க 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ரம்புக்கனை தேர்தல் அமைப்பாளராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |