ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க சீ.ஐ.டி.யில் முன்னிலை
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இன்று விசாரணை ஒன்றுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
நல்லாட்சிக் காலத்தில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலம் தொட்டு சமன் ஏக்கநாயக்க அவரது உத்தியோகபூர்வ செயலாளராகப் பணியாற்றியிருந்தார்.
சுற்றுப் பயணங்கள்
இந்நிலையில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு சுற்றுப் பயணங்களுக்கு ஜனாதிபதி செயலக நிதி மோசடியாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தற்போது குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது.
அது தொடர்பான விசாரணைக்கு வாக்குமூலம் வழங்குவதற்காகவே சமன் ஏக்கநாயக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அழைக்கப்பட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளர் சாண்ட்ரா பெரேராவும் நேற்றைய தினம் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சோமரத்ன ராஜபக்சவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அது அநுரவின் ஆட்சிக்கு ஆகப்பெரும் கறை: கௌதமன் தெரிவிப்பு!
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




