முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்கும் வர்த்தமானி.. அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கை
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்குவது தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் வாகனம், உத்தியோகபூர்வ இல்லம், தனிப்பட்ட பணியாளர்களுக்கான கொடுப்பனவுகள் உள்ளிட்ட சலுகைகளை இரத்துச் செய்யும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அண்மையில் வெளியிட்டிருந்தார்.
அரசியலமைப்பின் விதிமுறைகள்
எனினும், குறித்த வர்த்தமானி அறிவித்தல் அரசியலமைப்பின் விதிமுறைகளுக்கு முரணானனது என்று சட்ட வல்லுனர்கள் அரசாங்கத்துக்கு சுட்டிக் காட்டியுள்ளனர்.

மேலும், அந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றம் சென்றால் அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு எதிரான தீர்மானம் ஒன்றை நீதித்துறை மேற்கொள்ளலாம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் காரணமாக குறித்த வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறும் விடயம் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஆலிவர் பின்னால் இருக்கும் அந்த நபர் இவர்தானா, அடுத்த வில்லன் ரெடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri