சஜித்துடன் இணைந்த முன்னாள் இராணுவத் தளபதி
இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை நேற்று (29.01.2024)சந்தித்து கலந்துரையாடிய பின்னர் தயா ரத்நாயக்க ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவ நடவடிக்கைகள்
அதனையடுத்து ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுக் கொள்கைகள் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகராக ஜெனரல் தயா ரத்நாயக்கவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நியமித்துள்ளார்.
ஜெனரல் தயா ரத்நாயக்க, 35 வருடங்களுக்கும் மேலாக (1980-2015) இலங்கை இலகு காலாட் படையணிக்கு தலைமை தாங்கி செயற்பட்டதோடு,நான்காம் கட்ட ஈழப்போரில் கிழக்கில் இடம்பெற்ற மிகப்பெரும் இராணுவ நடவடிக்கைகக்கு முன்னிலை வகித்துள்ளார்.
யுத்தம் முடிவுற்றதன் பின்னர் புனர்வாழ்வுப் பணியகத்தின் ஆணையாளர் நாயகமாக 12,000 முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களின் புனர்வாழ்வுக்காகவும் பணியாற்றியுள்ளார்.
இராணுவப் பேச்சாளர்
இலங்கை இராணுவ அகாடமியின் கட்டளைத் தளபதி, ஊடகப் பணிப்பாளர், பாதுகாப்பு அமைச்சின் இராணுவப் பேச்சாளர் போன்ற பதவிகளை அவர் வகித்துள்ளார்.
யுத்தத்திற்கு பிறகு,மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க 2013 ஓகஸ்ட் மாதம் 01 ஆந் திகதி தொடக்கம் செயற்படும் வண்ணம் இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார்.லெப்டினன் ஜெனராகவும் பதவியுயர்த்தப்பட்ட அவர், ஓய்வு பெற்றதும் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றார்.
இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவராகவும், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியின் அரசாங்கத்தில் கைத்தொழில் அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |