ஆனையிறவு உப்பளம் உட்பட உப்பளங்களை முழுமையாக செயற்படுத்த நடவடிக்கை
இலங்கையின் உப்பு பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முயற்சியின் கீழ், இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் வடக்கில் ஆனையிறவில் உள்ள ஒரு உப்பளம் உட்பட உப்பளங்களை முழுமையாக செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர் கயான் வெல்லால (Gayan Wellala) இதனை கூறியுள்ளார்.
100 மில்லியன் செலவில் புதுப்பித்தல் நடவடிக்கைகள்
உள்நாட்டுப் போருக்குப் பின்னர் செயற்படாமல் இருந்து வந்த, ஆனையிறவு உள்ளிட்ட வடக்குப் பகுதி உப்பளங்கள், உப்பு உற்பத்தியை அதிகரிக்க உதவும் வகையில் உருவாக்கப்பட்டு வருவதாக வெல்லால தெரிவித்துள்ளார்.
2001ஆம் ஆண்டு அமைச்சரவை முடிவின் மூலம் ஆனையிறவு நிர்வாகம் தேசிய உப்பு நிறுவனத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.
2009ஆம் ஆண்டு அந்தப் பகுதி விடுவிக்கப்பட்ட பிறகு, உப்பளத்தை, பாரம்பரிய தொழில் மற்றும் சிறு தொழில் மேம்பாட்டு அமைச்சகம் கையகப்படுத்தியது,
அத்துடன் 100 மில்லியன் செலவில் புதுப்பித்தல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது
2ஆம் கட்ட நடவடிக்கைகள்
இதற்கிடையில், 2015 ஆம் ஆண்டில் 2ஆம் கட்டம் நடவடிக்கைக்காக அமைச்சரவை 125 மில்லியன் ரூபாய்களுக்கு ஒப்புதல் அளித்தது.
அத்துடன் 2015, செப்டம்பர் 21 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் உப்பளமானது இப்போது மீண்டும் தேசிய உப்பு நிறுவனத்தின் நிர்வாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கட்டம் -1 மற்றும் கட்டம் -2 புதுப்பித்தல் நடவடிக்கைகளில் 95 வீதம் நிறைவடைந்துள்ளன.
எனவே புதுப்பித்தலுடன், உப்பு உற்பத்தி ஆண்டுக்கு சுமார் 20,000 தொன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர் கயான் வெல்லால கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![75 ரன்னுக்கு 7 விக்கெட்..தனியாளாக 90 ஓட்டங்கள் விளாசி அணியை காப்பாற்றிய மேக்ஸ்வெல் (வீடியோ)](https://cdn.ibcstack.com/article/9d713146-e8d1-4580-9b00-98766b5d8d3b/25-67839793d02e6-sm.webp)
75 ரன்னுக்கு 7 விக்கெட்..தனியாளாக 90 ஓட்டங்கள் விளாசி அணியை காப்பாற்றிய மேக்ஸ்வெல் (வீடியோ) News Lankasri
![numerology: இந்த திகதிகளில் பிறந்த பெண்கள் தான் ஆண்களின் கனவு கன்னிகளாம்... உங்க திகதி என்ன?](https://cdn.ibcstack.com/article/b894c83f-b610-4375-b7c2-6f08de875af9/25-678359c95dd70-sm.webp)