தமிழக அரசின் நிகழ்வொன்றில் கலந்து கொள்ளவுள்ள தமிழ் எம்.பிக்கள்
புதிய இணைப்பு
நான்காவது உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் நாள் மாநாடு தமிழ்நாட்டின் சென்னை வர்த்தக மையத்தில் இன்று (11) ஆரம்பமாகியுள்ளது.
'எத்திசையும் தமிழணங்கே' என்ற தலைப்பில் நடைபெறும் இந்த நிகழ்வில் 60 நாடுகளிலிருந்தும் 17 மாநிலங்களில் இருந்தும் பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டுள்ளார்கள்.
இந்த நிகழ்வில் விசேட அழைப்பின் பெயரில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், சிவஞானம் சிறீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளார்கள்.
முதலாம் இணைப்பு
தமிழ்நாட்டில் (Tamil Nadu) இடம்பெறவுள்ள உலக புலம்பெயர் தமிழர்கள் தின நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்றுள்ளனர்.
குறித்த நிகழ்வானது இன்றும் (11) நாளையும் (12) 'எத்திசையும் தமிழணங்கே' என்ற தலைப்பில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்விற்காக தமிழக அரசின் அழைப்பின் பெயரில் கலந்துகொள்வதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் (Shanakiyan Ragul Rajaputhiran), சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சென்றுள்ளனர்.
தமிழ் மக்கள் பிரச்சினைகள்
இந்தநிலையில், சென்னை சென்றுள்ள இரா.சாணக்கியன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்திய நாடாளுமன்றில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கனிமொழியைச் சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது, ஈழத் தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் சம்பந்தமாகவும், மத்திய அரசில் தமிழ் நாட்டின் குரலை எமக்காகத் தொடர்ந்து எழுப்புவது சம்பந்தமாகவும் கலந்துரையாடியுள்ளனர்.
தமிழ்நாட்டில் இரு தினங்கள் இடம்பெறும் மாநாட்டில் பங்குகொண்டு எதிர்வரும் 13 ஆம் திகதி மேற்படி மூவரும் நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 6 நாட்கள் முன்

எச்சரிக்கையை மீறி அந்த நாட்டிற்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய தம்பதி சிக்கலில்... கவலையில் குடும்பம் News Lankasri

கில்லி படத்தின் 200வது நாள்.. தளபதி விஜய்யுடன் ரஜினிகாந்த்! பலரும் பார்த்திராத புகைப்படம் Cineulagam

இந்திய கடவுச்சீட்டு இருந்தால் மேலும் 6 நாடுகளிலிருந்து UAE-க்கு விசா இல்லாமல் நுழையலாம் News Lankasri

இந்த நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் மனைவியை இளவரசி போல் நடத்துவார்கள்... யார் யார்ன்னு பாருங்க Manithan
