ஆனையிறவு உப்பள ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து முக்கிய சந்திப்பு
கிளிநொச்சி (Kilinochchi) - ஆனையிறவு உப்பள ஊழியர்களுக்கும் தேசிய உப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளருக்குமான சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.
பல்கோரிக்கைகளை முன்வைத்து உப்பள ஊழியர்களின் ஒருதரப்பினரால் போராட்டம் ஒன்று கடந்த 15 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
குறித்த உப்பளத்தில் கடந்த ஒன்பது வருடங்களுக்கு மேலாக பணியாற்றும் தற்காலிக பருவகால ஊழியர்கள் தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
மேலும், இங்கு உற்பத்தியாகும் உப்பினை ஆனையிறவில் பொதி செய்து விநியோகிக்குமாறும் தற்போதைய முகாமையாளரை இடமாற்ற கோரியும் கடந்த 14ஆம் திகதி ஆனையிறவுஉப்பளத்தின் முன்பாக போராட்டம் முன்னெடுத்து இருந்தனர்.
இந்த நிலையில் அரச சொத்துக்குச் சேதம் ஏற்படுத்தல் மற்றும் ஆனையிறவில் உள்ள உப்பை வெளியிடத்திற்கு கொண்டு செல்வதற்கு தடை விதிக்க கூடாது என கிளிநொச்சி பொலிஸார் கிளிநொச்சி நீதிவான் நீதமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நகர்த்தல் பத்திரத்தினூடாக வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் இன்றைய இச்சந்திப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri

கூலி திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ்.. ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடிகள் வந்துவிட்டதா Cineulagam
