யாழில் கூட்டுறவு உற்பத்திப் பொருட்கள் கண்காட்சியும் விற்பனையும்
யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு சபையினால் யாழ். மாவட்டத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களினுடைய உற்பத்திப் பொருள்களின் விற்பனையும் கண்காட்சியும் நிகழ்வு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று (23.01.2026) ஆரம்பமாகியுள்ளது.
தொடர்ந்து மூன்று நாட்கள் கண்காட்சி இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வினை சம்பிரதாயபூர்வமாக வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ஆரம்பித்து வைத்தார்.
அரசியல், சமூக ஆய்வாளரான செல்வின் இரேனியஸ் கூட்டுறவின் முக்கியத்துவமும் அதன் இன்றைய நிலையும் தொடர்பில் சிறப்புரையாற்றினார்.
தரமான உற்பத்தி காட்சிப்படுத்தல்
புடவை நெசவாளர் கூட்டுறவுச் சங்கம், பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கம், சிக்கன கடன்வழங்குவோர் கூட்டுறவு சங்கம், கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கம், பேக்கரி பொருள்கள் உற்பத்தி சங்கம், தோற்பொருள் அபிவிருத்தி கூட்டுறவு சங்கம், பழ உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் என பல்வேறு சங்கங்களும் இணைந்து கொண்டு தங்களது தரமான உற்பத்திகளை காட்சிப்படுத்தியுள்ளன.




