அனுமதி பத்திரமின்றி அரச மதுபானம் விற்பனை: இருவர் கைது
அனுமதி பத்திரமின்றி அரச மதுபானத்தை விற்பனை செய்தமை மற்றும் உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு பேர் நேற்று(07) கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரச மதுபான விற்பனை
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யபப்பட்டவர்கள் பளை பொலிஸாரால் நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு
இதன்போது குறித்த சந்தேகநபர்களுக்கு 40 ஆயிரம் ரூபா தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 540 மில்லி லீட்டர் அரச மதுபானத்தை விற்பனை செய்தமை மற்றும் உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவருக்கு இருபத்தையாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மற்றொருவருக்கு பதினையாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.





எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவானந்தம் உயிருடன் இருப்பதை அறியும் ஆதி குணசேகரன்! கொலை செய்ய வரும் அடியாட்கள் Cineulagam
