மட்டக்களப்பு நகரில் மனித பாவனைக்குதவாத உணவுப்பொருட்கள் விற்பனை (Video)
மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் மனித பாவனைக்குதவாத உணவுப்பொருட்களை விற்பனை செய்த 4 வர்த்தக நிலையங்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் (R. Mithunraj) தெரிவித்துள்ளார்.
குறித்த வர்த்தக நிலையங்களில் இருந்து சுமார் 100 கிலோ மனித பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு தாதியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இத்தேடுதல் நடவடிக்கையில் இன்று காலை முதல் ஈடுபட்டுள்ளனர்.
மட்டக்களப்பு பொதுச் சந்தை உட்பட நகரிலுள்ள பேக்கரிகள், சில்லறை கடைகள், ஹோட்டல்கள், மரக்கறி கடைகள் உட்பட 16 கடைகளில் தேடுதல் நடாத்திய போது 4 வர்த்தகர்கள் மாட்டியதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.









