கோடிகளில் புரண்ட விஜய்..! நாளை தமிழக முதலமைச்சரானதும் பெறப்போகும் சம்பளம் - சலுகைகள்!
தமிழக அரசியல் வரலாற்றில் புதிய திருப்பமாக, நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் தலைமையிலான தவெக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், நாளை (7) அவர் தமிழக முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார்.
இந்த நிலையில், அவருக்குக் கிடைக்கவுள்ள மாத சம்பளம் மற்றும் சலுகைகள் குறித்து தகவல்கள் வெளியாகி கவனம் பெற்றுள்ளன. திரைத்துறையின் உச்சத்தில் இருந்தபோதே அதை விட்டு விட்டு மக்களுக்காக அரசியலுக்கு வந்ததாக பல்வேறு மேடைகளில் விஜய் குறிப்பிட்டிருந்தார்.
முதலமைச்சரின் சம்பளம்
“வசதியான வாழ்க்கையை விட்டுவிட்டு மக்கள் சேவைக்காக வந்துள்ளேன்” என்ற அவரது பேச்சுகள் தேர்தல் பரப்புரையிலும் பெரும் வரவேற்பைப் பெற்றன.
மேலும், தனது கடைசி படம் “ஜனநாயகன்” என அறிவித்திருந்த அவர், இனி முழுமையாக அரசியலில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதனால், சினிமா வருமானம் இனி இருக்காது என்றாலும், முதலமைச்சராக கிடைக்கும் ஊதியம் மற்றும் சலுகைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன.

அவரது வேட்பு மனுவில் தாக்கல் செய்யப்பட்ட சொத்து விவரங்களின்படி, விஜய் பெயரில் ரூ.404.58 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ.115.13 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.76 கோடி வரை கடனாக வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சருக்கான மாதாந்திர ஊதியம் சுமார் ரூ.2.05 லட்சம் என 2024ஆம் ஆண்டு திருத்தப்பட்ட அரசாணை கூறுகிறது. இதை முன்னாள் துணைச் செயலாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஊதியத்துக்கு அப்பாற்பட்ட பல்வேறு சலுகைகளும் முதல்வருக்கு வழங்கப்படுகின்றன. இவை தவிர்த்து அரசு குடியிருப்பு, முதல்வருக்கான குண்டு துளைக்காத சிறப்பு வாகனங்கள், இசட் பிளஸ் பாதுகாப்பு, குடும்ப மருத்துவக் காப்பீடு, தொலைத்தொடர்பு வசதிகள், பயண வசதிகள், வீட்டிலும் அலுவலகத்திலும் பணியாற்றுவதற்கான பணியாளர்கள் மற்றும் அவர்களுக்கான ஊதிய செலவுகளை தமிழக அரசே ஏற்கிறது.
இவற்றோடு, முதல்வருக்கு தனி ஹெலிகாப்டர் வழங்குவதுடன் விமானப் பயண செலவுகளையும் அரசே செலுத்துகிறது. தமிழக முதல்வருக்கு கிரீன்வேஸ் சாலையில் அரசு பங்களா ஒதுக்கப்படுகிறது.
இந்த வீட்டுக்கு வாடகை எதுவும் செலுத்தத் தேவையில்லை. பராமரிப்பு, மின்சாரம், தண்ணீர் கட்டணங்களை அரசே செலுத்திவிடும். ஆனால் கடந்த காலத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் போன்ற முதல்வர்கள் தங்கள் சொந்த வீடுகளிலேயே தங்கியிருந்துள்ளனர்.
சலுகைகளின் விவரம்
இருப்பினும் அந்த வீடு, முதல்வரின் இல்லம் என்ற பெயரிலேயே எப்போதும் பராமரிக்கப்படுகிறது. இதர வசதிகள் குறித்து ரவிச்சந்திரன் அளித்த தகவல்களின்படி, முதல்வரின் வாகனங்களுக்கு மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை பெட்ரோல் அலவன்ஸ் வழங்கப்படுகிறது.

முதல்வருக்கு 3 கார்கள் தரப்படும். ஓட்டுநருக்கான ஊதியத்தை அரசாங்கமே வழங்கும். மாநில அரசின் சார்பில் உயர் பாதுகாப்பு வழங்கப்படுவதுடன், மத்திய அரசின் சார்பில் இசட் பிளஸ் அந்தஸ்துள்ள பாதுகாப்பும் தமிழக முதல்வருக்கு வழங்கப்படும்.
வெளி மாநிலங்கள், வெளியூர்களுக்கு விமானங்களில் முதல்வர் செல்வதற்கு அரசே கட்டணம் செலுத்தும். அதற்கு படிவங்கள் முறைப்படி நிரப்பி சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்தக் கட்டணம், பிற சாதாரண விமானப் பயணிகளைவிட, அதிகமாக இருக்கும் என்றும், அந்தத் தொகையைச் செலுத்திவிட்டு பின்பு அதை அரசிடம் (Reimbursement) பெற்றுக் கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் விளக்குகின்றனர்.
தமிழக முதலமைச்சர்
முதல்வர் பயணம் செய்வதற்குத் தனியாக ஒரு ஹெலிகாப்டர், விமானிகள் குழு ஆகியவற்றுக்கும், அதன் எரிபொருள் மற்றும் பராமரிப்புக்கும் அரசாங்கமே நிதி ஒதுக்கீடு செய்கிறது.
தமிழ்நாடு முதல்வராக விஜய் பெறப்போகும் ஊதியம் மற்றும் பிற சலுகைகளின் முழு விவரம்பட மூலாதாரம், முழு அளவில் பாதுகாப்பு வழங்கப்படும் தனியாருக்குச் சொந்தமான அந்த ஹெலிகாப்டருக்கு தமிழக அரசே மாதாந்திர வாடகை செலுத்துகிறது.

அந்த ஹெலிகாப்டரில் 8 பேர் வரை பயணம் செய்ய முடியும். முதல்வர் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு விரிவான மருத்துவக் காப்பீடும் தனியாக உள்ளது.
முதல்வருக்கான தனிப்பட்ட ஊதியம், படித்தொகை, செலவுகள் ஆகியவற்றை தமிழக அரசின் பொதுத்துறைதான் கவனித்துக் கொள்கிறது. பாதுகாப்புக்கு மாநில காவல்துறையினரும், அணிவகுப்பு வாகனத்தில் தனியாக பாதுகாப்புப் படையினரும் பொலிஸாரால் நியமிக்கப்படுவார்கள்.
தகவல் தொடர்பு வசதிகளுக்கான படி, தொகுதிப்படி, பயணப்படி உள்ளிட்ட பல்வேறு இதர சலுகைகளும் பொதுத்துறையால் முதல்வருக்கு வழங்கப்படுகின்றன என்று விளக்கினார்.
இவ்வாறு, குறைந்த மாத சம்பளமாக இருந்தாலும், தமிழக முதலமைச்சர் பதவிக்கு உரிய பல்வேறு சலுகைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.