செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணி! அகழ்தெடுக்கப்பட்டுள்ள இரு என்பு கூட்டு குவியல்
செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து இரு என்பு கூட்டு குவியல் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 9ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(6) புதன்கிழமை நடைபெற்றது.
செம்மணி மனித புதைகுழி
அதன்போது, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூட்டு தொகுதியில் 3 என்பு கூட்டுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் ஒரு என்பு கூடு அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , அவற்றின் பெருமளவான பாகங்கள் மயானத்தின் எரிமேடை கட்டுமானத்திற்கு கீழ் செல்வதனால் , அதனை சுத்தம் செய்து அகழ்ந்து எடுக்கும் பணிகள் எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் இதுவரையான காலப்பகுதியில் செம்மணி மனித புதைகுழியில், 256 மனித என்புகூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 252 மனித என்பு கூட்டு தொகுதி முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ருதி வீட்டில் விஜயாவிற்கு ஏற்பட்ட அவமானம், கைவிறித்த பார்வதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஜனனி சொன்ன ஒரே ஒரு விஷயம், ஷாக்கான ஈஸ்வரி, கதிர் போடும் திட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam