பரபரப்பை ஏற்படுத்திய தேர்தல் முடிவுகள்! தமிழ்நாட்டின் 16ஆவது சட்டப்பேரவை கலைக்கப்பட்டதாக அறிவிப்பு
தமிழ்நாட்டின் 16ஆவது சட்டப்பேரவை கலைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டப்பேரவையானது நேற்றுடன் அதாவது மே 5ம் தேதியுடன் கலைக்கப்பட்டதாக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அறிவித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து புதிய அரசு பதவியேற்க உள்ள நிலையில், அரசியல் சாசன நடைமுறைகளின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
புதிய ஆட்சி
கடந்த மாதம் ஏப்ரல் 23ல் நடைபெற்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை வென்றுள்ளது.

விரைவில் இக்கட்சி ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், நேற்று முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதவியிலிருந்து விலகியிருந்தார்.
இதனை தொடர்ந்து சட்டமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், 17வது சட்டப்பேரவை விரைவில் அமையவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எல்லா உண்மையையும் சொன்ன ஜனனிக்கு ஷாக் கொடுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam