பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள விவகாரம்: மத்திய வங்கி ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதம்
அவகாசம் கோரி ஜனாதிபதிக்கு மத்திய வங்கி ஆளுநரால் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கையில் மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பில் மத்திய வங்கியால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கடந்த நாடாளுமன்ற அமர்வுகளில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
சம்பள அதிகரிப்பு
இலங்கை மத்திய வங்கியின் நிர்வாக சபையின் அங்கீகாரத்துடன் தொழிற்சங்கங்களுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டின் பிரகாரம் இந்த சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விளக்கமளிப்பதற்காக எழுத்துமூல அவகாசம் கோருமாறு நிர்வாக சபையினால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய நிதியமைச்சராக கடமையாற்றும் ஜனாதிபதிக்கு கடந்த 22ஆம் திகதி மத்திய வங்கி ஆளுநரால் கடிதம் ஒன்று அனுப்புப்பட்டுள்ளது.
அந்த சந்தர்ப்பத்தின் பின்னர் உரிய நாடாளுமன்றக் குழுவின் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்க மத்திய வங்கி தயாராகவுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 15 மணி நேரம் முன்

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
