பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு நிச்சயம் : ஜனாதிபதி உறுதி (LIVE)
இந்த வருட இறுதிக்குள் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1,700 ரூபாய் அடிப்படை சம்பளத்தை பெற்றுத்தருவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.
மலையக சமூகத்தினருக்கு இன்று வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இலஞ்சம் மற்றும் ஊழல் ஆகியவற்றை நாட்டின் மேல் மட்டத்தில் இருந்து இல்லாது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் இருந்து ஒரு போதும் பின்வாங்கப்போவதில்லை.
"இந்த மலையகம் சமூகம் ஒரு சிறந்த பணியைச் செய்து வருகின்றது. அவர்கள் 202 ஆண்டுகளாக வாழ்ந்து இறந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, ஒரு அரசாங்கமாக, அவர்களுக்கு அடிப்படைத் தேவைகளையும் வசதியான வாழ்க்கையையும் வழங்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது.
மலையக மக்கள் தொடர்பில் பல துறைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வீட்டுவசதி வழங்குவது அரசின் பொறுப்பு. இரண்டாவது பிரச்சினை அவர்களுக்கு ஒரு நல்ல சம்பளத்தை வழங்குவதாகும். அவர்கள் நீண்ட காலமாக 1,750 சம்பளத்தை கோரி வருகின்றனர். இந்த ஆண்டுக்குள் அந்த உரிமையை வழங்க நாங்கள் பாடுபடுவோம்" என்று ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan
