தனியார்துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு விசேட சட்டமூலம்
தனியார்துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு விசேட சட்டமூலம் ஒன்றை முன்வைக்கவுள்ளதாக தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அமைச்சர் மனுஷ நாணயக்கார,
தற்போதைய நிலையில் கூலித்தொழிலாளர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்கள் மிகவும் சிரமத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பது தெளிவாகத் தெரிந்த விடயமாகும்.
பொருளாதார நெருக்கடி
எனவே அவர்களுக்கான சம்பள அதிகரிப்பு நியாயமான முறையில் மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் விசேட சட்டமூலம் ஒன்று முன்வைக்கப்படவுள்ளது.
அதே போன்று பெரும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் நியாயமான சம்பள உயர்வு கிடைக்கப்பெற வேண்டும் என்பதில் தொழில் அமைச்சு தொழிலாளர்களுக்கு சார்பான கருத்தைக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
