அரச மருத்துவ அதிகாரிகளால் மேற்கொள்ளப்படவிருந்த வேலைநிறுத்த போராட்டம் இடைநிறுத்தம்
புதிய இணைப்பு
நாடளாவிய ரீதியில் நாளையதினம் (5) அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் மேற்கொள்ளப்படவிருந்த வேலைநிறுத்த போராட்டத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவுடன் இன்று (04) பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதன் செயலாளர் டாக்டர் பிரபாத் சுகதபால தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட சங்கம், மார்ச் 21 வரை, தமது போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கிடையில் தமது கோரிக்கைகள் குறித்து மேலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
எதிர்காலத்தில் வைத்தியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayathissa) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தி்ல் இன்றையதினம் (4) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, வைத்தியர்களுக்கான அடிப்படை வேதனம், மேலதிக சேவைக் கொடுப்பனவு, விடுமுறை நாள் கொடுப்பனவு, வருடாந்த சம்பள அதிகரிப்பு, மற்றும் உழைக்கும் போதான வரி (Paye Tax) செலுத்துவதில் நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
சம்பள அதிகரிப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், ”இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் தமது கொடுப்பனவுகளை துண்டித்ததால் மார்ச் 5ஆம் திகதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் முதற் தடவையாக யாரும் எதிர்பார்க்காத வகையில் எமது அரசாங்கம் சம்பள அதிகரிப்பை அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கவுள்ளது.
இதற்கு முன்னர் சிறியதொரு கொடுப்பனவே வழங்கப்பட்டதுடன் தற்போது அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.” என தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
