நாடாளுமன்றில் டிஜிட்டல் வரியை நியாயப்படுத்தும் அரசாங்கம்
தனியாட்கள் மற்றும் வணிகங்கள் உட்பட நாட்டின் அனைத்து குடிமக்களும் வரி செலுத்த வேண்டும் என்று,பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ (Anil Jayantha Fernando) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (4) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, டிஜிட்டல் துறைக்குள் செயல்படும் தனிநபர்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தொடர்பில் குற்றம் சுமத்தப்படுவது நியாயமற்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
டிஜிட்டல் சேவை
டிஜிட்டல் சேவை ஏற்றுமதிகளுக்கான 15% வரி விகிதம் டிஜிட்டல் துறையை கவனமாக பரிசீலித்த பிறகு அறிமுகப்படுத்தப்பட்டது என்றும், அது எப்போதும் நியாயமாகப் பயன்படுத்தப்படுகிறது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
வரி கட்டமைப்பை விரிவாக எடுத்துக் கூறிய அமைச்சர், “டிஜிட்டல் சேவைகளை ஏற்றுமதி செய்யும் தனிநபர்கள் ஒரு சிறப்பு நன்மையைப் பெறுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அவர்களின் 500,000 வருமானத்தில் முதல் 150,000 ரூபாவுக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அடுத்த 83,000 ரூபாய்க்கு 6% வரி விதிக்கப்படுகிறது, மீதமுள்ள தொகைக்கு 15% வரி விதிக்கப்படுகிறது.
இந்த நன்மையைப் பெற, அவர்கள் தங்கள் வரி வருமானங்களைச் சமர்ப்பிக்கும் போது ஏற்றுமதி சேவைகள் மூலம் தங்கள் வருமானம் ஈட்டப்பட்டது என்பதை நிரூபிக்க வேண்டும். என்றும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
