பொலிஸ் அதிகாரிகளுக்கு சம்பள உயர்வு: வெளியான தகவல்
அடுத்த வருடம் பொலிஸ் அதிகாரிகளுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் பொலிஸ் அதிகாரிகளின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பொலிஸ் அதிகாரிகளின் கடமைகள் மேம்படுத்தப்படும். பொலிஸ் அதிகாரிகளால் செய்யப்படும் பணிகள் மிக உயர்ந்த தரத்திற்கு கொண்டு வந்து, அவர்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.
சம்பள உயர்வு
பொலிஸ் அதிகாரிகள் மிகக் குறைந்த சம்பளத்தைப் பெறுகிறார்கள். அந்த சம்பளம் தொடர்பாக ஜனாதிபதியின் அவதானம் வரை கொண்டு செல்லப்பட்டது.
அந்த அவதானத்திற்கு அமைய அடுத்த ஆண்டு புதிய சம்பள அமைப்பைத் தயாரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




