ஜனாதிபதி நிதி ஒதுக்காது போனாலும் மக்கள் தேவைகளை நிறைவேற்றுவோம்! சஜித் பிரேமதாச
உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி நிதியொதுக்காது போனாலும் மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்போம் என்று சஜித் பிரேமதாச(Sajith Premadasa) உறுதியளித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சனிக்கிழமை கம்பஹா கிரிந்திவல பிரதேசத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் நிதி ஒதுக்கீடு
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறாத உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு நிதி ஒதுக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எனினும் எங்களது கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் ஜனாதிபதியின் நிதி ஒதுக்கீட்டை மாத்திரம் நம்பி இருக்கமாட்டோம்.
அரசாங்கம் நிதி ஒதுக்காது போனாலும் எங்கள் கட்சியின் அதிகாரத்தில் வரும் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்வோம் என்றும் சஜித் பிரேமதாச தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
