சஜித்தின் யாழ்.விஜயம் குறித்து மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) எதிர்வரும் 9ஆம் திகதி தொடக்கம் 13ஆம் திகதி வரை யாழ். தேர்தல் மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார்.
குறித்த விஜயமானது, யாழில் (Jaffna) உள்ள பாடசாலைகளுக்கு தலா 11 இலட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறைகளை (Smart Classroom) கையளிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 9ஆம் திகதி கிளி/ பாரதி வித்தியாலயம், யா/ வைத்தீஸ்வரா கல்லூரி மற்றும் யா/ சென். பெனடிக்ற் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு தலா 11 இலட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறைகள் சஜித் பிரேமதாசவினால் வழங்கி வைக்கப்படவுள்ளன.
விசேட திட்டம்
மேலும், எதிர்வரும் 10ஆம் திகதி பருத்தித்துறை மற்றும் உடுப்பிட்டி தொகுதிகளிலுள்ள யா/ கொட்டாவத்தை அமெரிக்க மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை மற்றும் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கு தலா 11 இலட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறைகள் வழங்கி வைக்கப்படவுள்ளன.
அது மாத்திரமன்றி, அதே தினத்தில் அளவெட்டி யா/ அருணோதயா கல்லூரிக்கு 11 இலட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறையை சஜித் பிரேமதாச கையளிக்கவுள்ளார்.
அதேவேளை, எதிர்வரும் 11ஆம் திகதி அவர், யா/ நெடுந்தீவு மகாவித்தியாலம், யா/ சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி, யா/ புனித. ஹென்றியரசர் கல்லூரி இளவாலை ஆகிய பாடசாலைகளுக்கு தலா 11 இலட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறைகளை வழங்கி வைக்கவுள்ளார்.
ஸ்மார்ட் வகுப்பறை
எதிர்வரும் 12 அன்று கோப்பாய் தொகுதிக்கு விஜயம் செய்யும் எதிர்க்கட்சித் தலைவர், யா/ அத்தியார் இந்துக் கல்லூரிக்கு 11இலட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறையை அன்பளிப்பு செய்யவுள்ளார்.
இதனை தொடர்ந்து, வட்டுக்கோட்டை யா/ யாழ்ற்ரன் கல்லூரி காரைநகர் பாடசாலைக்கு 11 இலட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை வழங்கி வைக்கப்படவுள்ளது.
மேலும், யா/ சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு விஜயம் செய்து பஸ் வண்டி ஒன்றினை சஜித் பிரேமதாச வழங்கி வைக்கவுள்ளார்.
விஜயத்தின் இறுதி நாளான 13ஆம் திகதி யா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரி, கிளி/ இரணைதீவு றோ.க.த.க ஆகிய பாடசாலைகளுக்கு தலா 11 இலட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறைகள் வழங்கி வைக்கப்படும்.
இந்நிலையில், குறித்த விஜயத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன மற்றும் கட்சியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ் ஆகியோர் இணைந்து கொள்ளவுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |