எதிர்க்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற சஜித் தீவிர முயற்சி
எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றில் இடம்பெறும் ஜனாதிபதி தெரிவுப் போட்டியில், பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஆகியோர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக இதுவரை அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தமக்கு எதிராக உள்ள உறுப்பினர்களை, தமக்கு வாக்களிக்க கூறி, கடினமாக பிரசாரம் செய்கின்றோம். அது, ஜிஆரின் பெரும்பான்மை என்பதால் கடினமானது.
ராஜபக்சவின் ஊழல் தொடர்பில் விளக்கம்
"ராஜபக்சவின் ஊழல் மற்றும் கூட்டு அரசியலை தொடர்ந்து ஆதரிப்பதன் பயனற்ற தன்மையை அவர்களுக்கு விளக்க முயற்சித்தேன் என்றும் சஜித் பிரேமதாச ட்வீட் செய்துள்ளார்.
Campaigning hard to try and persuade the MPs opposed to us to vote with us. Tough going since it is the @GotabayaR majority. Tried explaining to them the futility of continuing to support Rajapaksa’s corrupt and crony politics.
— Sajith Premadasa (@sajithpremadasa) July 17, 2022
எதிர்வரும் 19ஆம் திகதி செவ்வாய்கிழமை வேட்புமனுக்கள் கோரப்பட்டு அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 20ஆம் திகதி புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தேர்தலின் பின்னர் ஜனாதிபதி பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவு செய்யப்படுவார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்காமல்,
இறுதியில் தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.