மீண்டும் ரணிலுடன் கைகோர்க்கும் சஜித்..! நம்பிக்கை வெளியிட்ட ஐ.தே.க
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி போன்ற அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்டவை ஏற்கெனவே ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதால் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும்(Sajith premadasa) ஐ.தே.கவுடன் இணையலாமென, ஐ.தே.கவின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாலித ரங்கே பண்டார(Palitha Range Bandara) தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் மாவட்ட தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடனான சந்திப்பு தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு இவ்வாறு கூறினார்.
ரணில் விக்ரமசிங்கவுடன் இணையும் குழுவினர்
முன்னாள் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவால்(Maithripala Sirisena) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகார பதவிகளிலிருந்து நீக்கப்பட்ட தலைவர்கள், எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்(Ranil Wickremesinghe) அரசாங்கத்தை நடத்த ஆதரவளிப்பார்களெனவும், அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணையும் சில குழுவினர், ஐ.தே.க.வுடன் இணைவதாகவும் இன்னும் சில குழுவினர் தமது அடையாளத்தை பாதுகாத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், அவர் குறிப்பிட்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri