டொலர் பெறுமதியில் ஏற்படும் சடுதியான மாற்றம்: வெளிப்படுத்தப்பட்டுள்ள காரணம்
எதிர்காலத்தில் இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் (Dollar) பெறுமதி 280 ரூபாவாக குறையும் என நம்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் சரியான பொருளாதார முகாமைத்துவத்தினால் ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.
டொலரின் பெறுமதி
கடந்த வருடம் டொலர் ஒன்றின் பெறுமதி 370 ரூபாவாக காணப்பட்டது. இன்று டொலரின் பெறுமதி 300 ரூபாவாக காணப்படுகிறது. எதிர்காலத்தில் இது 280ஆகக் குறைக்கப்படும் என்று நம்புகிறோம்.
இதன்படி எதிர்மறையான பொருளாதார வளர்ச்சி வீதத்தைக் கொண்டிருந்த நாட்டின் பொருளாதாரம் தற்போது வலுப்பெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |